சினிமா செய்திகள்

பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2025-06-21 13:45 IST   |   Update On 2025-06-21 13:45:00 IST
  • பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
  • ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் படத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே இதேபோல் ஒருமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திக்கப்பட்டது. இதனால் பவன் கல்யாணின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், 'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஜூலை 24 ஆம் இப்படம் வெளியாகும் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பவன் கல்யாணின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News