சினிமா செய்திகள்
null

பிரபல திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

Update: 2023-02-05 02:52 GMT
  • 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன்.
  • வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன்.

வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

நேற்று பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Tags:    

Similar News