சினிமா செய்திகள்

என்ன ஒரு அருமையான திரைப்படம்... 'பைசன்' படக்குழுவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

Published On 2025-11-28 10:20 IST   |   Update On 2025-11-28 10:20:00 IST
  • ‘பைசன்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
  • உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட்டி வீரர் தினேஷ் கார்த்திக் 'பைசன்' படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,




'பைசன்' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அருமையான திரைப்படம் மாரிசெல்வராஜ். உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்த எதார்த்தமான நடிப்பிற்காக துருவ் கடுமையாக உழைத்துள்ளார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். படக்குவுக்கு என் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.



Tags:    

Similar News