சினிமா செய்திகள்

STR 50 படத்திற்கு முன் மணிகண்டனை இயக்கும் தேசிங் பெரியசாமி?

Published On 2025-06-24 16:40 IST   |   Update On 2025-06-24 16:40:00 IST
  • சமீபத்தில் தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
  • சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க போவதாக படக்குழு அறிவித்தது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன்.சமீபத்தில் தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் சிம்பு தற்பொழுது வெற்றி மாறன் இயக்கும் வட சென்னை பின்னணியில் உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்க போவதாக படக்குழு அறிவித்தது.

தற்பொழுது சிம்பு வெற்றி மாறன் திரைப்படத்தில் நடித்து வருவதால். தேசிங் பெரியசாமி அடுத்து மணிகண்டனை வைத்து ஒரு சிறிய பட்ஜெட்டில் திரைப்படத்தை இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். மணிகண்டன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதற்குள் சிம்பு வெற்றி மாறன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News