சினிமா செய்திகள்

Kalki 2898 AD பாகம் இரண்டிலிருந்து தீபிகா படுகோன் நீக்கம் - தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

Published On 2025-09-18 13:03 IST   |   Update On 2025-09-18 13:03:00 IST
கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு  ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும்.

இந்நிலையில் படக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர் அதில் "கல்கி 2898 இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க மாட்டார். இதை நாங்கள் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவாகும். அவருடைய ஒத்துழைப்பு சரியாக இல்லாததால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். கல்கி போன்ற படத்திற்கு அதிக கமிட்மெண்ட் தேவை. தீபிகா படுகோனே நடிக்கும் வருங்கால படங்களுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News