சினிமா செய்திகள்

உங்களின் ஆதரவின்றி வென்றிருக்க முடியாது- ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித்

Published On 2025-04-22 18:11 IST   |   Update On 2025-04-22 18:11:00 IST
  • துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்திருந்தது.
  • உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் ரேஸராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி கார் ரேஸில் அஜித் கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் அஜித் கூறியதாவது:- ரேஸிங் பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அஜித் கூறினார்.

ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியிலும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3-வது இடத்தை அஜித்குமார் கார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News