சினிமா செய்திகள்

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

Published On 2025-09-03 13:46 IST   |   Update On 2025-09-03 13:46:00 IST
  • விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
  • இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'வீர தீர சூரன்'. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் விக்ரமுக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது. இதையடுத்து விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம், கமர்ஷியல் படங்களை கொடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பல ஆண்டுகளாக பணியாற்றிய விஷ்ணு எடவனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம்- விஷ்ணு எடவன் இணைந்துள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் விஷ்ணு எடவன் தற்போது கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'ஹை' படத்தை இயக்கி வருகிறார். விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு விஷ்ணு எடவன் பாடல்களை எழுதியுள்ளார். 'நான் ரெடி தான்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் விஷ்ணு எடவன் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News