சினிமா செய்திகள்

அனுபமா நடித்த Paradha படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published On 2025-07-17 13:32 IST   |   Update On 2025-07-17 13:32:00 IST
  • அனுபமா பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா'. இப்படம் இன்று மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியானது.

இதை தொடர்ந்து அனுபமா பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஐதரபாத்தில் நடைப்பெற்றது. இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

ப்ரவீன் இதற்கு முன் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தில் சங்கீதா க்ரிஷ் மற்றூம் தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை ஆனந்த மீடியா நிறுவனம் தயாரிக்க கோபி சுந்தர் இசையை மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News