சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் கே.ஆர்.விஜயா

Published On 2025-09-05 08:47 IST   |   Update On 2025-09-05 08:47:00 IST
  • உடலையும், உள்ளத்தையும் இளமையோடு பராமரிப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
  • கொண்டை கூந்தலுடன் காணப்படும் கே.ஆர்.விஜயா, தற்போது ‘மாடர்ன் லுக்'கில் அசத்தி வருகிறார்.

இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையும், 'புன்னகை அரசி' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான கே.ஆர்.விஜயா, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

கே.ஆர்.விஜயா, தற்போது சென்னை தியாகராயநகரில் வசித்து வருகிறார். உடலையும், உள்ளத்தையும் இளமையோடு பராமரிப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், சலூனுக்கு சென்று கூந்தல் பராமரிப்பு சிகிச்சைகளையும் செய்து கொண்டு வருகிறார். கொண்டை கூந்தலுடன் காணப்படும் கே.ஆர்.விஜயா, தற்போது 'மாடர்ன் லுக்'கில் அசத்தி வருகிறார்.

அவருக்கு சிகை அலங்காரம் செய்து வரும் சக்தி கூறும்போது, ''நேரம் கிடைக்கும்போது கே.ஆர்.விஜயா கூந்தல் பராமரிப்பு சிகிச்சை செய்துகொள்வார். எங்களுடன் ஆனந்தமாக பேசுவார். இன்றளவும் இளமையுடன் அவரை காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'', என்றார்.

76 வயதிலும் கே.ஆர்.விஜயா ஸ்டைல் லுக் உடன் காட்சியளிப்பது, அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News