நாளை வெளியாக இருக்கும் 4 திரைப்படங்கள்
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
செப்டம்பர் 19ம் தேதியான நாளை, கிஸ், சக்தித் திருமகன், தண்டகாரண்யம், படையாண்ட மாவீரா ஆகிய 4 திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
கிஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள திரைப்படம் கிஸ். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சக்தித் திருமகன்
விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். சக்தித் திருமகன் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாளை வெளியாகிறது.
தண்டகாரண்யம்
இயக்குனர் அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படையாண்ட மாவீரா
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார் வ.கௌதமன். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.