சினிமா
ஜேடி.சக்கரவர்த்தி,

தியேட்டரில் நடக்கும் திரில்லர் கதையில் ஜேடி.சக்கரவர்த்தி

Published On 2021-05-05 17:37 IST   |   Update On 2021-05-05 17:37:00 IST
விஷாலின் சமர், சர்வம், அரிமா நம்பி படங்களில் நடித்த ஜேடி. சக்கரவர்த்தி தியேட்டரில் நடக்கும் திரில்லர் கதையில் தற்போது நடித்துள்ளார்.
ஒரு திரையரங்கில் ஒரு நாளில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'MMOF'. இப்படத்தை என்.எஸ்.சி இயக்கி இருக்கிறார். திருமதி அனுஸ்ரீ வழங்கும் ஆர். ஆர். ஆர் மற்றும் ஜெகதீசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகியுள்ளது.

இப்படத்தில் நாயகனாக விஷாலின் சமர், சர்வம், அரிமா நம்பி படங்களில் நடித்த ஜேடி. சக்கரவர்த்தியும், நாயகியாக அக்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ரீராம் சந்திரா, மனோஜ் நந்தன், பேனர்ஜி, செம்மக் சந்திரா, க்ராக் ஆர். பி ஆகியோரும் நடித்துள்ளனர்.



ஒரு திரையரங்கில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்பவர் யார்? என்ன காரணம்? என்பது புதிராக உள்ளது. பரபரப்பான காட்சிகளோடு சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. திரை அரங்கில் நடக்கும் கொலைகளுக்கும் திரையரங்கில் காட்சிப்படுத்தும் படத்தில் வரும் காட்சிகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்ன? என்பது மர்மமாக வைத்து முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு முழுவதும் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடைபெற்றுள்ளது.

Similar News