சினிமா
கேரளா போலீஸ்

கொரோனா விழிப்புணர்வு... ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ் - வைரலாகும் வீடியோ

Published On 2021-04-29 02:58 GMT   |   Update On 2021-04-29 07:32 GMT
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கேரள போலீசார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியாகி வைரலான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். இந்த பாடலுக்கு போலீசார் மாஸ்க் அணிந்தபடி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். 



கேரள போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “கேரளா போலீஸ் வழி, எப்போதும் தனி வழி. எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி” என குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News