சினிமா
தாமு

தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு

Published On 2021-04-22 13:02 GMT   |   Update On 2021-04-22 13:02 GMT
தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு கொடுத்து வரும் தாமுவிற்கு தேசிய கல்வியாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது. 

கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது. 



கல்வித் துறையில் சில முக்கியமான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, நடிகர் தாமுவுக்கு, இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News