சினிமா
சவுமியா சேத்

கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்றேன் - பிரபல நடிகை சொல்கிறார்

Published On 2021-04-21 07:35 IST   |   Update On 2021-04-21 07:35:00 IST
கர்ப்பமாக இருந்தபோது மன உளைச்சலால் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததாக பிரபல நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பராகான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்ற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சவுமியா சேத். தொடர்ந்து படங்களில் நடித்த அவர் இந்தி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அருண் கபூர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

காதல், திருமண வாழ்க்கை குறித்து சவுமியா சேத் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நான் கடந்த 2019-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தேன். தற்போது எனது குடும்பத்தினர் மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஏற்கனவே நான் கர்ப்பமாக இருந்தபோது மன உளைச்சலால் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். எனது முகத்தை கண்ணாடியில் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. 



தற்கொலை செய்துக் கொள்ள முயன்றேன். ஆனால் எனது பெற்றோர் தடுத்துவிட்டனர். என்னுள் இருந்த தற்கொலை உணர்வையும் மாற்றினார்கள். குழந்தைக்காக வாழ வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. இருப்பினும் கொரோனாவால் வரமுடியவில்லை. காதலில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

Similar News