சினிமா
விவேக்

அவர் நட்ட மரங்கள் கூட அவரை நினைத்து வாடும் - விவேக் மறைவிற்கு பிரபல நடிகர் உருக்கம்

Published On 2021-04-17 10:39 IST   |   Update On 2021-04-17 10:39:00 IST
மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு திரைப்பிரபலங்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி வருகிறார்கள்.
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டுவந்த காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.



நடிகர்கள் பாண்டியராஜன், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சூரி, மயில்சாமி, நாசர், மனோபாலா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் பேசிய நாசர், அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும் என்று உருக்கமாக பேசி சென்றார்.

Similar News