சினிமா
விவேக், வைரமுத்து

மனிதர்கள் மட்டுமல்ல... நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன - வைரமுத்து இரங்கல்

Published On 2021-04-17 10:24 IST   |   Update On 2021-04-17 10:24:00 IST
மனிதர்கள் மட்டுமல்ல, நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ 'காமெடி'க் கதாநாயகன்” 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News