சினிமா
விவேக்

நலமுடன் உள்ளார் - நடிகர் விவேக் தரப்பு விளக்கம்

Published On 2021-04-16 15:28 IST   |   Update On 2021-04-16 15:28:00 IST
நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



இந்நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியதாவது: “நடிகர் விவேக் இன்று காலை, தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் நலம் பெற்று செய்தியாளர்களைச் சந்திப்பார் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்”. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News