சினிமா
ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த்

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Published On 2021-04-16 14:41 IST   |   Update On 2021-04-16 14:41:00 IST
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். 



நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Similar News