சினிமா
சினிமா பிரபலங்கள்

தனுஷ் முதல் வடிவேலு வரை.... சட்டசபை தேர்தலில் வாக்களிக்காத சினிமா பிரபலங்கள்

Published On 2021-04-07 08:56 GMT   |   Update On 2021-04-07 08:56 GMT
நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், வாக்களிக்காத திரைப்பிரபலங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று பாதுகாப்பான முறையில் நடந்து முடிந்தது. ரஜினி, விஜய், கமல், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேபோல் திரைப் பிரபலங்கள் சிலர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

அவர்கள் யார்.. யார் என்பது பின்வருமாறு: ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, யுவன், ஜி.வி.பிரகாஷ், மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, மோகன், கார்த்திக், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, வடிவேலு, விஜயகாந்த், பிரபுதேவா, லாரன்ஸ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, சிவா, சமுத்திரக்கனி, கவுதம் மேனன், கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் அவர்கள் தெரிவிக்கவில்லை.



அதேபோல் நடிகர் தனுஷும் வாக்களிக்கவில்லை. 'தி க்ரே மேன்' எனும் ஹாலிவுட் படத்துக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதால் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஐஸ்வர்யா தனுஷும் அவருடன் சென்றிருப்பதால் வாக்களிக்கவில்லை. அதேபோல் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்தும் வாக்களிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று அவருடைய தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News