சினிமா
அஜித்

செல்பி எடுக்க வந்த ரசிகர்.... கோபத்தில் செல்போனை பிடுங்கிய அஜித்

Published On 2021-04-06 08:39 IST   |   Update On 2021-04-06 08:39:00 IST
தன் மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜித்துடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது செல்போனை பிடுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து கோபமடைந்த அஜித் அவரது செல்போனை பிடிங்கிக் கொண்டார்.



மேலும் கோபத்தில் ரசிகர்கள் அனைவரையும் வெளியே செல்லும்படியும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Similar News