சினிமா
வாக்களிப்பதற்காக அஜித்தும் ஷாலினியும் வரிசையில் காத்திருந்தபோது எடுத்த புகைப்படம்

ஜனநாயக கடமையாற்றிய அஜித் - வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்

Published On 2021-04-06 07:42 IST   |   Update On 2021-04-06 08:41:00 IST
நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அஜித் குமார், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் அஜித்தும், ஷாலினியும் முகக்கவசம் அணிந்தபடி வந்து வாக்களித்துவிட்டு சென்றனர்.  



அஜித்தும் ஷாலினியும் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News