சினிமா
அக்‌ஷய் குமார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி

Published On 2021-04-05 12:21 IST   |   Update On 2021-04-05 12:21:00 IST
நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்த அக்‌ஷய் குமார், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், தன்னை சமீப காலங்களில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். 



இந்நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அக்‌ஷய் குமார்,  நலமாக இருப்பதாகவும்  விரைவில் வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Similar News