சினிமா
விஜய், பிரசாந்த் நீல்

‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்?

Published On 2021-04-01 18:10 IST   |   Update On 2021-04-01 18:10:00 IST
கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ள பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார்.
கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள அவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது.



இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகவும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கோலிவுட் வட்டாரத்தினர் இது உண்மையில்லை என மறுக்கின்றனர். 

Similar News