சினிமா
மம்முட்டி, ரஜினி

ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி

Published On 2021-04-01 16:37 IST   |   Update On 2021-04-01 16:37:00 IST
மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



அந்த வகையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, தளபதி பட பாணியில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News