சினிமா
கார்த்தி

கார்த்தியின் ரசிகர்கள் செயலால் மகிழ்ச்சியடையும் பொதுமக்கள்

Update: 2021-03-31 17:06 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தியின் ரசிகர்கள் செயலால் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சுல்தான்’. ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கார்த்திக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அவ்வப்போது பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.இந்நிலையில், கார்த்தி ரசிகர்கள் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கிறார்கள். இதை சாப்பிட்ட பொதுமக்கள், 10 ரூபாய்க்கு யாரும் உணவு கொடுப்பதில்லை. கார்த்தி ரசிகர்கள் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவு டெலிவரி செய்யும் ஆண்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கார்த்திக்கும் அவரது ரசிகர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News