சினிமா
அஜித், மோகன்லால்

மோகன்லால் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

Published On 2021-03-31 09:28 IST   |   Update On 2021-03-31 09:28:00 IST
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் மோகன்லால், ‘பரோஸ்’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழில் இருவர், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘பரோஸ்’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இது 3டி தொழில்நுட்பத்தில், குழந்தைகளுக்கான படமாக தயாராகிறது. இப்படத்தில் பிருத்விராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. 


இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. மோகன்லால் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அஜித் நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதனை பரோஸ் படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதன்மூலம் அது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Similar News