நடிகை நிரஞ்சனி - இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ளது.
நடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்
பதிவு: பிப்ரவரி 25, 2021 13:23
நிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி திருமண புகைப்படம்
பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி. இவர் கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
அவர்களது திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
Related Tags :