சினிமா
நக்‌ஷா சரண், வைரமுத்து

இளம் பாடகியை பாராட்டிய வைரமுத்து

Published On 2021-02-25 12:04 IST   |   Update On 2021-02-25 12:04:00 IST
தான் எழுதிய பாடலுக்கு கவர் பாடலை உருவாக்கிய இளம் பாடகியை பாடலாசிரியர் வைரமுத்து நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் நக்‌ஷா சரண். பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பல வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த முதல் திரைப்படமான ரோஜா படத்தில் இடம் பெற்ற "புது வெள்ளை மழை" எனும் பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.

இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்‌ஷா சரண், தற்போது இந்த பாடலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி  மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

தனது வைர வரிகளால்  ரசிகர்களை கட்டிப்போட்ட பாடலாசிரியர் வைரமுத்து, ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த கவர் பாடலை யூடியூபில் பார்த்துவிட்டு, நக்‌ஷா சரணை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Similar News