சினிமா
விஜய் சேதுபதி

தெலுங்கில் விஜய் சேதுபதி படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு

Published On 2021-02-24 10:35 IST   |   Update On 2021-02-24 10:35:00 IST
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானதால், அங்கு அவரது டப்பிங் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெற்றிபெற்றால் அவர்களின் முந்தைய படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களுக்கு ஆந்திர ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அவர்களின் படங்களை தமிழில் வெளியாகும்போதே தெலுங்கிலும் ரிலீஸ் செய்கின்றனர். 

விஜய்சேதுபதி சமீப காலமாக நேரடி தெலுங்கு படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற உப்பென்னா தெலுங்கு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். 



விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருப்பதால் ஏற்கனவே அவர் நடித்த தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. தற்போது விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை அதிக தொகைக்கு விற்பனையாகி உள்ளது. மற்ற படங்களை விற்கவும் பேரம் நடக்கிறது.

Similar News