சினிமா
மதுமிதா

மதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்த படக்குழுவினர்

Published On 2021-02-23 22:53 IST   |   Update On 2021-02-23 22:53:00 IST
சமீபத்தில் கலைமாமணி விருதை பெற்ற நடிகை மதுமிதாவிற்கு படக்குழுவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்.
ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டார். இந்நிலையில், நடிகை மதுமிதாவிற்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.



இதையடுத்து நடிகை மதுமிதா கலைமாமணி விருது பெற்றதை கவரவிக்கும் வகையில் நடிகர் அபிசரவணன் மற்றும் கும்பாரி படக்குழுவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Similar News