சினிமா
ஷங்கர்

ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகருடன் இணையும் ஷங்கர்?

Update: 2021-02-22 10:46 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளதால், இந்தியன் 2 படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. ஆதலால், ராம்சரண் படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஷங்கர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கதை சொல்லி உள்ளாராம். சமீபத்தில் சென்னை வந்த ரன்வீர் சிங், இயக்குனர் ஷங்கரை சந்தித்து கதை கேட்டாராம். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News