தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்ற நடிகர் விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது.
படத்தில் வில்லன்.... நிஜத்தில் போலீஸ் - பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்
பதிவு: பிப்ரவரி 22, 2021 12:05
விஜயன் பதவி உயர்வு பெற்ற போது எடுத்த புகைப்படம்
கேரள மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜயன். முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர், இந்திய அணிக்காக 70 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2000 - 2004ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் போலீஸ் வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில், கேரள காவல்துறை தனக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விஜயன். பதவி உயர்வு பெற்ற விஜயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :