சினிமா
ஹர்திக் பாண்டியா, குல்தீப், அஸ்வின், விஜய்

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் - வைரலாகும் வீடியோ

Published On 2021-02-21 11:39 IST   |   Update On 2021-02-21 11:39:00 IST
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாஸ்டர் படத்தில் இடம்பெறும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘வாத்தி கம்மிங்’. அனிருத் இசை அமைத்திருந்த இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினும், இந்த பாடலுக்கு தீவிர ரசிகர் தான். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மைதானத்திலேயே வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார் அஸ்வின்.

இந்நிலையில், சக இந்திய வீரர்களுடனும் அப்பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின். அந்த வீடியோவில் அஸ்வினுடன், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் நடனமாடி உள்ளனர். அவர்களின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Similar News