சினிமா
தி மார்க்ஸ்மேன்

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம்

Published On 2021-02-20 19:07 IST   |   Update On 2021-02-20 19:07:00 IST
ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’ தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசன் தனது கைபா பிலிம்ஸால் வெளியிடுகிறார்.
கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.

செலிப்ரிட்டி பிலிம் இண்டெர்நேஷ்னல் மற்றும் யூ எஃப் ஓ மூவிஸுடன் இணைந்து டெல் கணேசனின் கைபா பிலிம்ஸ் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ பிப்ரவரி 26 அன்று இந்தியாவில் வெளியிடுகிறது.



ராபர்ட் லோரென்ஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், பண்ணை உரிமையாளரான 60-வயது லியாம் நீசன், தாயை இழந்த 11 வயது சிறுவனை மெக்சிகோவின் போதை மருந்து கும்பலிடம் இருந்து எப்படி காக்கிறார் என்பதை விறுவிறுப்பான முறையில் அதிரடியாக விவரிக்கிறது.

Similar News