சினிமா
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டும் விவேக் ஓபராய்

ஹெல்மெட் அணியாமல் சென்று அபராதம் கட்டிய விவேக் ஓபராய்

Published On 2021-02-20 13:07 IST   |   Update On 2021-02-20 13:07:00 IST
இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஹெல்மட் அணியாததற்கு அபராதம் செலுத்தியுள்ளார்.
இந்தி நடிகர் விவேக் ஓபராய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் மோட்டார் சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்றை தனது வலைத்தள பக்கத்தில் பதிவேற்றினார்.

இந்த வீடியோவில் அவர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஹெல்மட் அணியவில்லை. 

சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த வீடியோவை கண்ட மும்பை போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். சாந்தாகுரூஸ் போக்குவரத்து போலீசார் இதற்கான ரசீதை அவருக்கு வழங்கினர்.

Similar News