ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அயலான் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
பதிவு: ஜனவரி 25, 2021 08:30
அயலான் பட போஸ்டர்
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
படப்பிடிப்பு முடிந்தாலும், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய 10 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அயலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.