மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது.
டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி
பதிவு: ஜனவரி 22, 2021 16:02
விக்ரம் பிரபு, சூர்யா
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான படம் புலிக்குத்தி பாண்டி. கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, இப்படத்தை இயக்கி இருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பட்ட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பப்பட்ட படங்களில் புலிக்குத்தி பாண்டி படம் தான் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பட்ட சூரரைப்போற்று படத்தைவிட புலிக்குத்தி பாண்டி படத்தை அதிகம் பேர் பார்த்துள்ளனர் என்பது டிஆர்பி மூலம் தெரியவந்துள்ளது. இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் விக்ரம் பிரபு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Related Tags :