சினிமா
தனுஷ், சஞ்சனா நடராஜன்

தனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் - ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்

Published On 2020-08-04 15:03 IST   |   Update On 2020-08-04 15:03:00 IST
தனுஷ் சிட்டி ரோபோ போன்றவர் என ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ள நடிகை சஞ்சனா நடராஜன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ‘ரகிட ரகிட’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்  ‘ஜகமே தந்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை சஞ்சனா நடராஜன், தனுஷுடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:  “தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஆனால் அவர் எனது பதற்றத்தை போக்கி நம்பிக்கை அளித்தார். தனுஷின் முதல் நாள் படப்பிடிப்பு முழுவதையும் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன். முதல் டேக்காக இருந்தாலும் சரி மூன்றாவது டேக்காக இருந்தாலும் சரி அவருடைய எனர்ஜி கொஞ்சம் கூட குறையாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.



தனுஷ்  ‘எந்திரன்’ படத்தில் வரும் ‘சிட்டி ரோபோ’ போன்றவர். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உடனடியாக உள்வாங்கிக்கொண்டு நடிப்பதில் அவர் வல்லவர். அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

Similar News