சினிமா
பமீலா ஆண்டர்சன்

திருமணமான 2 வாரங்களில் 5-வது கணவரை பிரிந்த நடிகை பமீலா ஆண்டர்சன்

Published On 2020-02-03 22:47 IST   |   Update On 2020-02-03 22:47:00 IST
பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், காதலித்து திருமணம் செய்த 5வது கணவரை விவகாரத்து செய்திருக்கிறார்.
பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவருக்கு வயது 52. பாடகர்கள் டாம்மி லீ, கிட் ராக், ‘போக்கர்’ விளையாட்டு வீரர் ரிக் சாலமன் ஆகியோரை திருமணம் செய்து, விவாகரத்து செய்தவர்.

12 நாட்களுக்கு முன்னர் பிரபல ஆலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது ஐந்தாவது திருமணம். ஏற்கனவே நான்கு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள்.

30 வருடங்களுக்கும் மேலாக காதலித்துவந்த இருவரும் கடந்த ஜனவரி 20-ந்தேதி அன்று, மலிபுவில் திருமணம் செய்து கொண்டார்கள். மலிபு நகரில், தனிப்பட்ட முறையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.



திருமணம் ஆகி, இரண்டு வாரங்களே ஆன நிலையில், இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பமீலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமண உறவில் நமக்கு என்ன வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை பரிசீலிக்க சில காலமாகும். ஆகையால், நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Similar News