சினிமா
பார்த்திபன்

ஹாலிவுட்டுக்கு செல்லும் பார்த்திபன்

Published On 2020-02-03 12:40 IST   |   Update On 2020-02-03 12:40:00 IST
ஒத்த செருப்பு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பார்த்திபன் அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். அவர் நடித்து இயக்கி பெரிய வெற்றி பெற்ற புதிய பாதை படமும் புதுமையான கதையசம்சத்திலேயே வந்தது. பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.

சமீபத்தில் இவர் மட்டும் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தினார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர். 



இப்படத்தை பாலிவுட்டிலும் ரீமேக் செய்கிறார் பார்த்திபன். அதில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் தன்னை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்ததாகவும், இதன்மூலம் தான் நேரடி ஆங்கில படத்தில் நடிக்க உள்ளதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதற்காக மார்ச் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News