சினிமா
ஜீவன்

ஜீவனின் பாம்பாட்டத்தில் இணைந்த பாலிவுட் நடிகை

Published On 2020-02-03 11:33 IST   |   Update On 2020-02-03 11:33:00 IST
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் பாம்பாட்டம் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்த ஜீவன் அடுத்ததாக நடிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கிறார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இப்படத்தில் ராணி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க அவருக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் தசாவதாரம், ஒஸ்தி போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News