சினிமா
ஆர்யா

ஆர்யாவுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்

Published On 2020-02-02 08:05 GMT   |   Update On 2020-02-02 08:05 GMT
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில், பிரபல இயக்குனர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’  திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம். படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. 



ஆர்யா கதாநாயகனாக இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நடிக்கிறார். வில்லனாக டைரக்டர் மகிழ்திருமேனி நடிக்கிறார். கதாநாயகன் ஆர்யா கதாபாத்திரத்துக்கு இணையாக மகிழ்திருமேனியின் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் டெடி படத்திலும் ஆர்யாவுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News