சினிமா
ரூபஞ்சனா மித்ரா

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்

Published On 2020-01-16 08:57 GMT   |   Update On 2020-01-16 08:57 GMT
யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் என்று நடிகை ரூபஞ்சனா மித்ரா இயக்குனர் மீது மீடூ புகார் அளித்துள்ளார்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ‘மீ டூ’ வில் சிக்கி வருகிறார்கள். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்களை அம்பலப்படுத்தினார்.

இந்தி இயக்குனர்கள் சாஜித் கான், சுபாஷ் கபூர், சுபாஷ் கை, லவ் ரஞ்சன், நடிகர் அலோக் நாத் மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் மீது ‘மீ டூ’ புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-



“இயக்குனர் அரிந்தம் செல் தனது அலுவலகத்துக்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு அவர் மட்டுமே இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் திடீரென்று எழுந்து வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டு போனார்.

அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார். அவரது ஆசைக்கு உடன்பட மறுத்தேன். சிறிது நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்தார். அதன்பிறகு நான் அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே வெளியே சென்றேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News