சினிமா
சந்தோஷ் நம்பிராஜன்

டூ லெட் பட நாயகன் நடித்து இயக்கி இருக்கும் சிங்கப்பூர் பொங்கல்

Published On 2020-01-14 21:50 IST   |   Update On 2020-01-14 21:50:00 IST
டூ லெட் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், தற்போது நடித்து சிங்கப்பூர் பொங்கல் என்ற பாடலை உருவாக்கி இருக்கிறார்.
டூ லெட் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன். இவர் தற்போது சிங்கப்பூர் பொங்கல் என்ற பாடலை உருவாக்கி நடித்து இயக்கி இருக்கிறார். சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். 

இப்பாடல் குறித்து சந்தோஷ் நம்பிராஜன் கூறும்போது, ‘தமிழர்கள் சாதி, மதம், நாடு கடந்து கொண்டாடும் பண்டிகை பொங்கல். மிக பிரமாண்டமாக சிங்கப்பூர், மலேசியா, மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சிங்கப்பூர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு அங்கீகாரமான ஆட்சி மொழியை முதன்முதலில் தந்துள்ளது. இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை. அதனால் தான் 'சிங்கப்பூர் பொங்கல்' தமிழர் திருநாள் பாடல் சிங்கப்பூரில் உருவாக காரணம்’ என்றார். மேலும் 2020ல் முதல் படம் ஆரம்பிக்க உள்ளது, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று சந்தோஷ் நம்பிராஜன் கூறினார்.



இந்த பாடலை வடிவரசு எழுத ஷர்வன் கலை இசையமைத்திருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் கோலிவுட் போல சிங்காவுட் நிறுவனம் சிங்கப்பூர் தலைமையிடமாக கொண்டு பல நல்ல படங்களை உருவாக்க போகிறது. சிங்கப்பூர் உள்ளூர் கலைஞர்களையும், நடிகர்களையும் உலகறியச் செய்ய போவதாக இந்த பாடலின் தயாரிப்பாளர்கள் லோகன் மற்றும் சரஸ் கூறியுள்ளார்கள்.

Similar News