சினிமா
தனுஷின் டி40 படப்பிடிப்பு நிறைவு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் டி40 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி உள்ளார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் சுமார் 70 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பழனி அருகில் உள்ள கோம்பைபட்டியில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், படத்தில் பணியாற்றியது குறித்து நடிகர் தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நான் நடித்ததிலேயே விரைவாக முடிவடைந்த படம் இதுதான். கார்த்திக் சுப்புராஜ் போன்ற விவேகமான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய இயக்குனருடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பானது என்று பாராட்டியுள்ளார்.