சினிமா
மீராமிதுன்

நடிகை மீராமிதுன் மீது புகார் அளித்தவர் கைது

Published On 2019-12-30 12:47 IST   |   Update On 2019-12-30 12:47:00 IST
நடிகை மீராமிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தவர், வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி இழிவாக வீடியோக்கள் வெளியிட்டதாக ஜோமைக்கேல் பிரவீன் என்பவர் மீது அடையாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் விசாரணைக்காக 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் ஜோ மைக்கேல் ஒருமுறை கூட ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அடையாறு மகளிர் போலீசார் விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தனர். அப்போது பெண்காவலர்களை ஜோ மைக்கேல் பிரவீன் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இது தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்தல், மானபங்கம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோமைக்கல் பிரவீன் மீது வழக்கு போடப்பட்டது. 



அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜோ மைக்கேல் பிரவீன் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். நடிகையும் அழகியுமான மீராமிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News