சினிமா
தியேட்டர்

படம் பிளாப் ஆனால் நஷ்ட ஈடு தர வேண்டும் - தியேட்டர் அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2019-12-25 08:43 IST   |   Update On 2019-12-25 08:43:00 IST
உச்சநட்சத்திரங்களின் திரைப்படம் தோல்வியை தழுவினால் அந்த நடிகர்களே நஷ்ட ஈடு தரவேண்டும் என தியேட்டர் அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.

* பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.

*  உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.

தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் தீர்மானம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News