சினிமா
பாக்யராஜ்

சம்மன் வர காரணம் குறித்து பாக்யராஜ் விளக்கம்

Published On 2019-12-23 14:40 GMT   |   Update On 2019-12-23 14:40 GMT
பட விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், தனக்கு சம்மன் வந்ததுக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
செந்தில்குமார் தயாரித்து, நடித்துள்ள படம் "டம்மி ஜோக்கர்". வினோநாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள். நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி, தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர். 

படத்தை பற்றி இயக்குனர்கள் கூறியதாவது: "புதையலையும் தந்தையையும் தேடி ஊருக்கு வரும் நாயகனுக்கு திகில் சம்பவங்கள் நடக்கின்றன. இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் காமெடிக்கு மாறும்" என்றார்கள். 



இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசியதாவது:- பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளதாக கூறினார்கள். அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்று ஜாக்குவார் தங்கம் பேசும்போது பெண்களே மது அருந்துகிறார்கள் என்று சொன்னார். அவருக்கும் ஒரு சம்மன் வரும் என்று நினைக்கிறேன். 

அதுபற்றி பேசி நான் இன்னொரு சம்மனை வரவைத்துக்கொள்ள விரும்பவில்லை. இங்கு இருக்கும் பெண்களுக்கு நான் பேசியது தவறு இல்லை. ஆனால் இங்கு இருக்கும் சிலர் போட்டுக்கொடுத்ததால் ஆந்திராவில் உள்ள பெண்கள் அமைப்பு தான் அனுப்பினார்கள். அதுதான் சம்மன் வர காரணம். என்னிடம் விளக்கம் கேட்டார்கள். கொடுத்தேன். பெண்கள் ஒருவர் வருத்தப்பட்டு இருந்தால் கூட நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றேன். ஏற்றுக்கொண்டார்கள்’. இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News