சினிமா
சின்மயி, ஒய்.ஜி.மகேந்திரன்

மாணவர்கள் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து- ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சின்மயி கண்டனம்

Published On 2019-12-23 14:47 IST   |   Update On 2019-12-23 14:47:00 IST
மாணவர்கள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்த போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான போராட்டம் நாடு முழுவதும் பரவியது. களத்தில் மாணவர்களும் இறங்கினார்கள்.

மாணவர்களின் போராட்டம் குறித்து நடிகரான ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும், பெண்கள் சைட் அடிப்பார்கள் என்பதை மனதில் வைத்தே போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 



பிரபல பாடகியான சின்மயி ஒய்.ஜி. மகேந்திரனின், இந்த கருத்து குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவரது பதிவில் ‘இந்த மனிதர் சொல்லும் கருத்தை எல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை மாற்ற முடியாது. அது நேர விரயம்தான்’ என்று சாடியிருக்கிறார். சின்மயியின் இந்த கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

Similar News