மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.
சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
பதிவு: டிசம்பர் 20, 2019 20:36
உதயநிதி - நித்யா மேனன் - அதிதிராவ்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது.
சில காரணங்களால் இப்படம் இந்த மாதம் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Related Tags :